Chennai Updates

எஸ்ஆர்எம் குளோபல் கன்சலேட்டிங் மற்றும் காக்னவி நிறுவனத்தின் ஒப்பந்தம்: இந்திய மாணவர்களை செயற்கை நுண்ணறிவு திறனுடன் உருவாக்கும் முயற்சி

July 13, 2023

உலகளவில் 9 லட்சம் பட்டதாரிகள்,15 லட்சம் பொறியாளர்கள் தேவை உள்ளதால் செயற்கை நுண்ணறிவு திறன் மிகு பொறியாளர்களை உருவாக்க எஸ்ஆர்எம் குளோபல் கன்சலேட்டிங் நிறுவனமும், ஜப்பான் நாட்டின் காக்னவி நிறுவன நிதி உதவியுடன் இயங்கும் போறம் இன்ஜினியரிங் நிறுவனம் மற்றும் கிராஸ்க்கோ லிமிடெட் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்ததில் எஸ்ஆர்எம் குளோபல் கன்சலேட்டிங் நிறுவனத்தின் தலைவரும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனத்தின் இணைவேந்தருமான டாக்டர் பா. சத்தியநாராயணன் காக்னவி இந்தியா நிறுவனம் மேலாண்மை இயக்குனர் மிட்சுட்டாக செகினோ ஆகியோர் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர். காக்னவி நிறுவனம் உலக அளவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதில் பாலமாக இயங்கி வருகிறது.

தொழில் நிறுவனங்களுக்கு தேவையான செயற்கை நுண்ணறிவு திறன் மிகு பொறியாளர்கள் மற்றும் அதற்கான சாதனங்களை உருவாக்கும் அமைப்பாகும்.இதன் அடிப்படையில் இந்திய மாணவர்களை அதற்கு தயார்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளன. இதனை அந்த நிறுவனத்தின் நிதி உதவியுடன் இயங்கும் போறம் இன்ஜினியரிங் நிறுவனம் மற்றும் கிராஸ்க்கோ லிமிடெட் நிறுவனங்கள் மூலமாக இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களை உருவாக்கபணியை மேற்கொண்டுள்ளன.அதன்படி எஸ்ஆர்எம் குரூப் கல்வி நிறுவனம் மாணவர்களை இதில் திறன் மிகு மற்றும் நிபுணர்களாக உருவாக்க எஸ்ஆர்எம் குளோபல் கன்சலேட்டிங் நிறுவனத்துடன் இணைந்துள்ளன. எஸ்ஆர்எம் குளோபல் கன்சலேட்டிங் பிரைவேட் நிறுவனம் தொழில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பாகும்.எஸ்ஆர்எம் குரூப் கல்வி நிறுவனம் மாணவர்களை சர்வதேச தரத்தில் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை திட்டங்களை உருவாக்குதல்,அயல் நாட்டு பல்கலைக்கழகங்களுடன் சர்வதேச உறவு மற்றும் உயர்கல்வி பரிவர்த்தனை, மாணவர்களின் தரத்தினை உயர்த்துதல்,மாணவர்களுக்கு ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருதல் உள்ளிட்ட பல்வேறு மாணவர் நலன் பணிகளை மேற்கொண்டு வருகிறது. எஸ்ஆர்எம் குரூப் கல்வி நிறுவனம் மாணவர்களை செயற்கை நுண்ணறிவு திறன் மிகு பொறியாளர்களாக உருவாக்க எஸ்ஆர்எம் குளோபல் கன்சலேட்டிங் நிறுவனமும், ஜப்பான் நாட்டின் காக்னவி நிறுவன நிதி உதவியுடன் இயங்கும் போறம் இன்ஜினியரிங் நிறுவனம் மற்றும் கிராஸ்க்கோ லிமிடெட் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன.

சென்னை தாஜ் கொரமண்டல் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் குளோபல் கன்சலேட்டிங் நிறுவனத்தின் தலைவரும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனத்தின் இணைவேந்தருமான டாக்டர் பா. சத்தியநாராயணன் காக்னவி இந்தியா நிறுவனம் மேலாண்மை இயக்குனர் மிட்சுட்டாக செகினோ ஆகியோர் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள ஜப்பான் தூதரக கான்சுலேட் ஜென்றல் தகா மாசயுக்கி,போறம் இன்ஜினியரிங் நிறுவனம் தலைவர் சுடொமோ சட்டோ,கிராஸ்க்கோ லிமிடெட் நிறுவன தலைவர் ஹிரோச்சி டோமினாக காக்னவி இந்தியா நிறுவனம் மேலாண்மை இயக்குனர் வருண் மொடகில் ஆகியோர் பங்கேற்றனர்.